Ultimate Tv Tamil
Top Tamil News Channel In Tamilnadu

Trending Now

அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தொண்டர்களுக்கு வெளியிட்டு உள்ள அறிக்கை….

0

திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

அஇஅதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க…

அமைப்பு செயலாளர்,

நாமக்கல் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் , சட்டமன்ற உறுப்பினர் பி. தங்கமணி அவர்களின் அறிவுறுத்தலின்படி..

அதிமுகவுக்கும் , தமிழக மக்களுக்காகவும் தன் வாழ்வை அர்ப்பணித்து தவவாழ்வு வாழ்ந்திட்ட மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 9- வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு..

திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில்…

மாநகர் மாவட்ட செயலாளர்,

முன்னாள் துணை மேயரான (எனது)

ஜெ.சீனிவாசன்,

அவர்களின் தலைமையில்

வருகின்ற 5.12.2025, வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி அளவில்..

திருச்சி நீதிமன்ற வளாகம் அருகே அமைந்துள்ள தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவ சிலை அருகில் நிறுவப்பட்டுள்ள.

அம்மா ஜெயலலிதா அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. அதுசமயம்

மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், வட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .

Leave A Reply

Your email address will not be published.