Ultimate Tv Tamil
Top Tamil News Channel In Tamilnadu

Trending Now

திருச்சி–சென்னை வழித்தடத்தில் ஏர்பஸ் விமான சேவை – நாளை முதல் தொடக்கம்..!!!

0

திருச்சி–சென்னை இடையே இன்டிகோ விமான சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இயக்கப்பட்டு வந்த ஏ.டி.ஆர். வகை சிறிய ரக விமானங்கள் சேவை குறைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக பெரிய ரக ஏர்பஸ் விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

இன்டிகோ நிர்வாகம் அறிவிப்பின்படி, வரும் 16ம் தேதி முதல் 31ம் தேதி வரை திருச்சி–சென்னை வழித்தடத்தில் வருகை மற்றும் புறப்பாடு சேர்த்து நான்கு ஏர்பஸ் விமானங்கள் தினசரி இயக்கப்படும்.

பெரிய ரக ஏர்பஸ் விமானங்களில் 176 பயணிகள் வரை பயணம் செய்ய முடியும். இதற்கு முன் இயக்கப்பட்ட சிறிய ரக விமானங்களில் 70 பயணிகள் மட்டுமே பயணம் செய்ய இயன்றது. இந்த மாற்றத்தின் மூலம் பயணிகளுக்கு கூடுதல் வசதியும், கால்களை நீட்டி அமரக்கூடிய இடவசதியும் கிடைக்கும்.

பெரிய ரக விமானங்களை இயக்க வேண்டும் என்ற தி.மு.க. மற்றும் ம.தி.மு.க. கோரிக்கையை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.