Ultimate Tv Tamil
Top Tamil News Channel In Tamilnadu

Trending Now

கிறிஸ்துமஸ் விழா பிரார்த்தனையில் பங்கேற்ற பிரதமர் மோடி..!

0

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, டெல்லி கத்தீட்ரல் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மக்களுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்தார். மேலும் அங்குள்ளவர்களுக்கு பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “டெல்லியில் உள்ள பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் திருப்பலியில் கலந்துகொண்டேன். அன்பு, அமைதி மற்றும் கருணை என காலத்தால் அழியாத செய்திகளை இந்த கூட்டம் பிரதிபலித்தது. கிறிஸ்துமஸின் உணர்வு நம் சமூகத்தில் நல்லிணக்கத்தையும் நல்லெண்ணத்தையும் ஊக்குவிக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.