நம்பெருமாள் – நிருமொழித் திருநாள் (பகல் பத்து)
10-ஆம் நாள் – நாச்சியார் திருக்கோலம் (மோகினி அலங்காரம்)
இன்று நம்பெருமாள், நாச்சியார் திருக்கோலத்தில் மோகினி அலங்காரமாக அருள்பாலித்தார்.
திருமுடி அலங்காரம் :
சௌரிக் சாயக் கொண்டை சாற்றி, அதில்
-
கலிங்கத்துராய்
-
சூர்ய–சந்திர வில்லைகள்
-
சிகப்பு கல் நெற்றிப் பட்டை
-
முத்துப் பட்டை (பக்க வாட்டில்)
அணிவிக்கப்பட்டது.
காதுகளில் வைர மாட்டல், தோடு, ஜிமிக்கி;
வலது திருமூக்கில் மூக்குத்தி அணிந்த அருட்காட்சி.
திருமேனி ஆபரணங்கள் :
-
பங்குனி உத்திர பதக்கம்
-
தாயார் வைர திருமாங்கல்யம்
-
தொங்கல் பதக்கம்
-
வரிசையாக அடுக்கு பதக்கங்கள்
-
பெரிய பவழ மாலை
-
காசு மாலை
-
இரு வட முத்து மாலைகள்
திருக்கர சேவை :
-
வலது திருக்கையில் : தங்கக் கோலக்கிளி
-
இடது திருக்கையில் :
-
வரிசையாக வில்வப் பத்ரம்
-
தாயத்து சரங்கள்
-
வளையல்
-
பவழக் கடிப்பு
-
வில்வப் பத்ர தொங்கல்
-
திருவடி அலங்காரம் :
திருவடிகளில் சதங்கை, தண்டை அணிந்து அருள்பாலித்தார்.
பின் சேவை அலங்காரம் :
-
பின்னல் ஜடை, அதன்மேல் ஜடை தாண்டா
-
திருமுடியில் கல் இழைத்த ராக்கொடி
-
ஜடைக்கு மேல் நாகம் வைத்த கல் இழைத்த ஜடை தாண்டா
-
புஜ கீர்த்தி
-
கச்சு எடுத்து கட்டி, அதில் அரைச் சலங்கை தொங்க
-
ரங்கூன் அட்டிகை
-
ஒட்டியாணம்
உடை மற்றும் அமர்வு :
வெண் பட்டாடை அணிந்து,
வலது திருவடியை மடித்து அமர்ந்து,
இடது திருவடியை நீட்டி,
திருக்கை தலையிப்புடன்
மோகினி ரூபமாக மங்களகரமாக அருள்பாலித்தார்.


