Ultimate Tv Tamil
Top Tamil News Channel In Tamilnadu

Trending Now

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என்ற 7 அரபு நாடுகளின் கூட்டமைப்பு நாடு உருவான தினம்……

0

டிசம்பர் 02, 1971 ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என்ற 7 அரபு நாடுகளின் கூட்டமைப்பு நாடு உருவான நாள். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரேபியத் தீபகற்பத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ள எண்ணெய் வளம் மிக்க ஒரு பாலைவன நாடாகும். இது அபுதாபி, அஜ்மான், துபை, புஜைரா, ராஸ் அல்-கைமா, சார்ஜா மற்றும் உம் அல் குவெய்ன் என்னும் அமீரகங்களை உள்ளடக்கியது. ஓமான், சவூதி அரேபியா மற்றும் கத்தார் இதன் அயல் நாடுகளாகும். ஐக்கிய அரபு அமீரகம் எண்ணெய், இயற்கை வாயு வளங்களைக் கொண்டது. பாலைவனப்பகுதியைச் சேர்ந்த சிறிய, ஏழை நாடுகள் என்ற நிலையிலிருந்து, தற்போது உயர் வாழ்க்கைத் தரம் கொண்ட நவீன நாடாக உயர்ந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.