Ultimate Tv Tamil
Top Tamil News Channel In Tamilnadu

Trending Now

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கதாநாயகனாக நடித்த படம் இன்று ரிலீஸ்..!!

0

திருப்பரங்குன்றம் மலை குறித்து ‘கந்தன் மலை’ என்று திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா இப்படத்தின் நாயகனாக நடிக்கிறார்.
 

திருப்பரங்குன்றம் மலை அருகே உள்ள ஒரு கிராமமே கதைக்களம். இங்குள்ள நாடக காதல், கோயில்களில் அறநிலையத்துறையின் செயல்பாடுகள் போன்ற கருத்துக்களை கொண்டதாக கதை அமைந்துள்ளது. முறுக்கிய மீசையுடன் எச்.ராஜா பஞ்சாயத்து தலைவர் வேடத்தில் நடித்துள்ளார். அவருக்கு எதிராக வில்லன் கேரக்டரில் நடிகர் சேரன்ராஜா நடித்துள்ளார்.

பா.ஜ., மாநில ஆன்மிகம் மற்றும் கோயில்கள் மேம்பாட்டு பிரிவு செயலாளர் சிவபிரபாகர், சந்திரசேகரன் ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்தை வீரமுருகன் இயக்கியுள்ளார். படத்தில் காதல், வீரம், சண்டை என நவரசமும் உண்டு. தியேட்டர்களுக்கு நெருக்கடி தயாரிப்பாளர் சிவபிரபாகர் கூறியதாவது: இரண்டரை மணி நேரம் ஓடும் வகையில் தயாரித்த படம் தற்போது ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஓடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
 

அறுபது நாளில் தயாரிக்கப்பட்ட இப்படத்தை இன்று (டிச.,19) தியேட்டர்களில் வெளியிடுவதாக இருந்தோம். ஆனால் அரசியல் நெருக்கடியால் தியேட்டர்கள் கிடைக்கவில்லை. எங்களுக்கு தியேட்டர் தருவதாக அறிவித்தவர்கள்கூட இப்போது, நீங்களே தியேட்டரை வாடகைக்கு வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள். நாங்களாக திரையிட முடியாது எனக்கூறிவிட்டனர். அப்படி ஒவ்வொரு தியேட்டரையும் வாடகைக்கு எடுத்து ஓட்டுவது இயலாத காரியம். எனவே யூ டியூப்பில் வெளியிட தீர்மானித்துவிட்டோம். அதன்படி இன்று ‘தாமரை’ என்ற யூடியூப் தளத்தில் படம் வெளியாகிறது என்றார்

Leave A Reply

Your email address will not be published.