Ultimate Tv Tamil
Top Tamil News Channel In Tamilnadu

Trending Now

சிம்ரன்பிரீத் கவுருக்கு தங்கம்; ஐஸ்வரி தோமருக்கு வெள்ளி..! இந்திய வீரர்கள் அசத்தல்..!!!

0

தோகாவில், உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் பைனல் நடக்கிறது. பெண்களுக்கான 25 மீ., ‘பிஸ்டல்’ பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஈஷா சிங் (585.23 புள்ளி), சிம்ரன்பிரீத் கவுர் பிரார் (584.25) முறையே 4, 5வது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தனர். மற்றொரு இந்திய வீராங்கனை மனு பாகர் (581.22) 9வது இடம் பிடித்து ஏமாற்றினார்.

அடுத்து நடந்த பைனலில் அசத்திய சிம்ரன்பிரீத் கவுர் (21 வயது), 41 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை தட்டிச் சென்றார். ஈஷா சிங் 15 புள்ளிகளுடன் 7வது இடம் பிடித்தார்.
 

ஐஸ்வரி ‘வெள்ளி’ ஆண்களுக்கான 50 மீ., ‘ரைபிள்-3 பொஷிசன்ஸ்’ பிரிவு தகுதிச் சுற்றில், இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (24 வயது), 595.42 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்தார். அடுத்து நடந்த பைனலில் அசத்திய ஐஸ்வரி தோமர், 413.3 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

பெண்களுக்கான 50 மீ., ‘ரைபிள்-3 பொஷிசன்ஸ்’ பிரிவு தகுதிச் சுற்றில் ஏமாற்றிய இந்தியாவின் சிப்ட் கவுர் சாம்ரா (584.30) 10வது இடம் பிடித்து ஏமாற்றினார்.

Leave A Reply

Your email address will not be published.