ருச்சி ஸ்ரீரங்கம் ராகவேந்திரர் கோவிலில் ரஜினிகாந்த் 75வது பிறந்தநாள் & 50வது பொன்விழா கொண்டாட்டம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாள் விழா மற்றும் அவரின் திரையுலகப் பயணத்தின் 50வது பொன்விழாவை முன்னிட்டு, படையப்பா திரைப்படம் இன்று உலகம் முழுவதும் மீண்டும் வெளியானது. இதையொட்டி, திருச்சி ஸ்ரீரங்கம் ராகவேந்திரர் கோவிலில் ரஜினி ரசிகர்கள் சிறப்பு வழிபாட்டை நடத்தினர்.

திருச்சி மாவட்ட தலைமை ரஜினி ரசிகர் மன்ற மாவட்டச் செயலாளர் கலில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஏராளமான ரஜினி ரசிகர்கள் பங்கேற்றனர். கோவிலில் விசேஷ பூஜைகள் செய்யப்பட்டதுடன், ரஜினி ரசிகர்கள் இணைந்து தங்கத்தேரை இழுத்து வழிபாடு செய்தனர்.
ரஜினிகாந்தின் நீண்டகால திரைப்பயணத்தையும், எழுச்சி மிக்க திரைப்பட தாக்கத்தையும் நினைவுகூரும் விதமாக நடந்த இந்த நிகழ்வு, ஸ்ரீரங்கம் பகுதியில் பண்டிகை சூழலை உருவாக்கியது.


