Ultimate Tv Tamil
Top Tamil News Channel In Tamilnadu

Trending Now

திடீரென ஓய்வை அறிவித்தார் ஜான் சீனா..! ரசிகர்கள் ஷாக்..!

0

2002-ம் ஆண்டு WWE போட்டிகளில் அறிமுகமான ஜான் சீனா தன்னுடைய தனித்துவமான மல்யுத்த உத்திகளால் ரசிகர்களிடையே சூப்பர்ஸ்டாராக உயர்ந்தார். அவருடைய என்ட்ரி இசை பலருடைய ரிங்டோனாக இருந்தது. மேலும் WWE ஜாம்பவான்களான தி ராக், ட்ரிபிள் ஹெச், ரேண்டி ஆர்ட்டன், தி அண்டர்டேக்கர் உள்ளிட்டொருடன் மோதியுள்ளார்.

மல்யுத்தம் தவிர ’தி சூசைட் ஸ்குவாட்’, ‘ஃப்ரீலான்ஸ் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களிலும், டிசி காமிக்ஸின் பிரபலமான ‘பீஸ்மேக்கர்’ வெப் தொடரில் பிரதான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், WWE மல்யுத்த போட்டிகளில் 17 முறை சாம்பியன் பட்டம் வென்ற உலக புகழ்பெற்ற வீரர் ஜான் சீனா, தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வரும் டிசம்பர் 13-ம் தேதியுடன் மல்யுத்த போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார். சுமார் 20 ஆண்டுகளாக இத்துறையில் அசத்தி வந்த ஜான் சீனா, அடுத்த கட்டமாக தனது முழு கவனத்தையும் சினிமா துறையில் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும்  ​​ஜான் சீனா ஒரு சமீபத்திய நேர்காணலின் போது தனது ஓய்வுக்குப் பிந்தைய திட்டங்களை வெளிப்படுத்தியுள்ளார் , WWE இன் தூதராக பணியாற்றப்(WWE ambassador) போவதாகக் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.