Ultimate Tv Tamil
Top Tamil News Channel In Tamilnadu

Trending Now

ஜல்லிக்கட்டு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு! ஆட்சியரிடம் அனுமதி பெறுவது கட்டாயம்!

0

சென்னை: ஜல்லிக்கட்டு போட்டிகளை பாதுகாப்பாக நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

பொங்​கல் பண்​டிகையை முன்​னிட்டு மதுரை மாவட்​டம் அலங்​காநல்​லூர், பாலமேடு மற்​றும் அவனி​யாபுரத்​தில் நடை​பெறும் ஜல்லிக்கட்டுப் போட்​டிகள் உலகப் புகழ்​பெற்​றவை. ஜல்லிக்கட்டு போட்​டிகளின்​போது வாடி​வாசல்​களில் காளை​களை அவிழ்ப்​ப​தையும், அவற்றை வீரர்கள் அடக்குவதையும் ஜல்​லிக்​கட்டு ஆர்​வலர்​கள் பெரு​மை​யாக கருதுகின்​றனர்.

இந்த ஜல்லிக்கட்டுப் போட்​டிகளைத் தொடர்ந்து தமிழகத்​தின் பிற மாவட்​டங்​களில் போட்​டிகள் நடை​பெறும். அடுத்த மாதம் நடை​பெற இருக்​கும் ஜல்லிக்கட்டுப் போட்​டிகளுக்கு மதுரை, திண்​டுக்​கல், தேனி, சிவகங்​கை, திருச்சி போன்ற தென்​மாவட்​டங்​களில் காளை உரிமை​யாளர்​கள் தங்​கள் காளை​களைத் தயார்​படுத்​தும் பணிகளில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி, ஜல்லிக்கட்டு போட்டிகளை பாதுகாப்பாக நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்களிடம் அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளை எங்கும் நடத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வடமாடு, மஞ்சு விரட்டு, எருது விடும் நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.