Ultimate Tv Tamil
Top Tamil News Channel In Tamilnadu

Trending Now

திருச்சி விமான நிலையத்தில் இண்டிகோ சேவை சீராக: இயக்குநர் ராஜீ தகவல்..!!!

0

திருச்சி விமான நிலைய இயக்குநர் ராஜீ தெரிவித்ததாவது:

டிசம்பர் 4 முதல் 7 வரை, திருச்சி விமான நிலையத்தில் இருந்து இயக்கப்பட இருந்த 9 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் 40 இண்டிகோ விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. இதனால் பயணிகளுக்கு எந்தத் தாமதத்தாலும் அல்லது மாற்றத்தாலும் அசௌகரியம் ஏற்படாதபடி அனைத்து தேவையான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

அத்துடன், டிசம்பர் 8 ஆம் தேதி முதல் இன்று வரை ஒரு இண்டிகோ விமானமும் ரத்து செய்யப்படவில்லை, விமான சேவை முழுமையாக சீராக நடைபெற்று வருகிறது என்றும் இயக்குநர் ராஜீ தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.