Ultimate Tv Tamil
Top Tamil News Channel In Tamilnadu

Trending Now

தங்கம் விலை.. ஒரே நாளில் சவரனுக்கு 1600 ரூபாய் உயர்ந்தது..!!

0

தங்கம் விலை இந்த ஆண்டு முதல் நாள் அன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.7,150 ஆகவும், பவுனுக்கு ரூ.57,200 ஆகவும் விற்பனை ஆனது. வெள்ளி ரூ.98-க்கு விற்பனை ஆனது.

 

தீபாவளி வரை தங்கம் விலை மிகவும் உயர்ந்தது. அதன் பின், இறங்குமுகத்தில் சென்றது. மீண்டும் கடந்த மாதம் இறுதியில் இருந்து இரண்டின் விலையும் ஏறுமுகத்தை நோக்கி நகரத் தொடங்கியது.

தங்கத்தில் முன்பு இருந்த விலை ஏற்ற வேகம் இப்போது இல்லை. மெல்ல மெல்லமாகவே உயர்ந்து வருகிறது.

 

இன்று (டிச.12) தங்கம் விலை உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ. 12,250க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.98,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ஒரு கிராம் ரூ.215க்கும், ஒரு கிலோ ரூ.2,15,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

தங்கம் விலையை பொறுத்தவரையில், நேற்று கிராமுக்கு ரூ.20-ம், சவரனுக்கு ரூ.160-ம் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 50-க்கும், ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

இந்நிலையில் தங்கம் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டி உள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,250-க்கும், சவரன் ரூ.98,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

வெள்ளி விலை இன்றும் வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.6-ம், கிலோவுக்கு ரூ.6 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.215-க்கும். ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 15 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

2.12.2025- ஒரு சவரன் ரூ.98,000

 

11.12.2025- ஒரு சவரன் ரூ.96,400

 

10.12.2025- ஒரு சவரன் ரூ.96,240

 

09.12.2025- ஒரு சவரன் ரூ.96,000

 

08.12.2025- ஒரு சவரன் ரூ.96,320

 

07.12.2025- ஒரு சவரன் ரூ.96,320

 

06.12.2025- ஒரு சவரன் ரூ.96,320

 

05.12.2025- ஒரு சவரன் ரூ.96,000 

Leave A Reply

Your email address will not be published.