Ultimate Tv Tamil
Top Tamil News Channel In Tamilnadu

Trending Now

தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்தது: வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 குறைவு..!! குட் நியூஸ்..!!

0

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு,சர்​வ​தேச பொருளா​தார சூழல்,ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால், தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.

நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.12,040-க்கும், சவரன் ரூ.96,320-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் வார தொடக்க நாளான நேற்று தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனையாகி செய்யப்பட்டது.

 இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது 

அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.96,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.12,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி பொறுத்தவரை கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ஒரு ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.199-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 99 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.