Ultimate Tv Tamil
Top Tamil News Channel In Tamilnadu

Trending Now

வரலாறு காணாத அளவுக்கு முட்டையின் விலை உயர்வு..!

0

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 6.40-ஆக உயர்ந்துள்ள நிலையில் சில்லறை விற்பனை கடைகளில் ஒரு முட்டை 8 ரூபாய்க்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 7 கோடி வரை முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது.இதில் சுமார் 1 கோடி வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது. 70 முதல் 80 லட்சம் முட்டைகள் சத்துணவுக்காக கொடுக்கப்படுகிறது. மீதமுள்ள முட்டைகள் தமிழகம், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு விற்பனைக்காக கொண்டுச் செல்லப்படுகிறது.

இந்நிலையில் நாமக்கல்லில் இருந்து சென்னைக்கு முட்டைகளை கொண்டுவருவதற்கான லாரி செலவு, ஏற்றி இறக்கும் கூலி செலவு உள்ளிட்டவை அதிகரித்துள்ளதால் முட்டை விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. மொத்த விற்பனையில் ஒரு முட்டை 7 ரூபாய் 50 காசுகளுக்கும், சில்லறை விற்பனையில் 8 ரூபாய்க்கும் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. முட்டை விலை உயர்வால் உணவகங்களில் ஆம்லேட், ஆஃப்பாயில் விலையும் அதிகரிக்கக்கூடும் அபாயம் உருவாகியுள்ளது. இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.