Ultimate Tv Tamil
Top Tamil News Channel In Tamilnadu

Trending Now

நடிகர் விஜய்க்கு சிபிஐ சம்மன்- ஜனவரி 12-ல் ஆஜராக உத்தரவு!

0

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறது. வேலுசாமிபுரத்தில் ஆய்வு செய்து பல்வேறு தகவல்களை சேகரித்த சிபிஐ அதிகாரிகள், கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டோர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள், காவல் துறையினர், தவெக நிர்வாகிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து தவெக நிர்வாகிகள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் கரூர் ஆட்சியர்,எஸ்பி ஆகியோருக்கு டெல்லி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியது. இதன்படி, மூன்று நாட்கள் தவெக நிர்வாகிகளிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 12 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

Leave A Reply

Your email address will not be published.