Ultimate Tv Tamil
Top Tamil News Channel In Tamilnadu

Trending Now

சென்னையில் பிட்புல், ராட்வீலர் வாங்க தடை.. மீறினால் ரூ. 1 லட்சம் அபராதம் – மாநகராட்சி அதிரடி …!!!

0

தடை செய்யப்பட்ட நாய்கள் கடித்து பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் தடை செய்யப்பட்ட நாய் இனங்களான பிட்புல், ராட்வீலர் நாய்களை புதிதாக வளர்ப்பதற்குத் தடை விதித்து மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாளை முதல் ராட்வீலர், பிட்புல் ரக நாய்களை புதிதாக வாங்கி வளர்ப்பவர்களுக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. சென்னையில் தடை செய்யப்பட்ட நாய்கள் கடித்து பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிட்புல், ராட்வீலர் நாய்களை புதிதாக வாங்கி வளர்ப்பவர்களுக்கு 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். தடை செய்யப்பட்ட நாய் இனங்களை வளர்க்க கூடாது. நாளை முதல் ராட்வீலர், பிட்புல் ரக நாய்களுக்கு உரிமை பெற விண்ணப்பிப்பதற்கும் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. செல்லப் பிராணிகளின் உரிமையாளர்கள் கட்டாம்ய உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஏற்கனவே ராட்வீலர், பிட்புல் நாய்கள் இனங்களை வைத்திருப்பவர்கள் உரிய விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அண்மையில் வளர்ப்பு நாய்கள் பொதுமக்களைத் தாக்கும் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.