Ultimate Tv Tamil
Top Tamil News Channel In Tamilnadu

Trending Now

திருவரங்கன் நம்பெருமாள் நிருமொழித் திருநாள் மோகினி அலங்காரத் திருச்சேவை..!!!

0

நம்பெருமாள் – நிருமொழித் திருநாள் (பகல் பத்து)
10-ஆம் நாள் – நாச்சியார் திருக்கோலம் (மோகினி அலங்காரம்)

இன்று நம்பெருமாள், நாச்சியார் திருக்கோலத்தில் மோகினி அலங்காரமாக அருள்பாலித்தார்.

திருமுடி அலங்காரம் :
சௌரிக் சாயக் கொண்டை சாற்றி, அதில்

  • கலிங்கத்துராய்

  • சூர்ய–சந்திர வில்லைகள்

  • சிகப்பு கல் நெற்றிப் பட்டை

  • முத்துப் பட்டை (பக்க வாட்டில்)
    அணிவிக்கப்பட்டது.

காதுகளில் வைர மாட்டல், தோடு, ஜிமிக்கி;
வலது திருமூக்கில் மூக்குத்தி அணிந்த அருட்காட்சி.

திருமேனி ஆபரணங்கள் :

  • பங்குனி உத்திர பதக்கம்

  • தாயார் வைர திருமாங்கல்யம்

  • தொங்கல் பதக்கம்

  • வரிசையாக அடுக்கு பதக்கங்கள்

  • பெரிய பவழ மாலை

  • காசு மாலை

  • இரு வட முத்து மாலைகள்

திருக்கர சேவை :

  • வலது திருக்கையில் : தங்கக் கோலக்கிளி

  • இடது திருக்கையில் :

    • வரிசையாக வில்வப் பத்ரம்

    • தாயத்து சரங்கள்

    • வளையல்

    • பவழக் கடிப்பு

    • வில்வப் பத்ர தொங்கல்

திருவடி அலங்காரம் :
திருவடிகளில் சதங்கை, தண்டை அணிந்து அருள்பாலித்தார்.

பின் சேவை அலங்காரம் :

  • பின்னல் ஜடை, அதன்மேல் ஜடை தாண்டா

  • திருமுடியில் கல் இழைத்த ராக்கொடி

  • ஜடைக்கு மேல் நாகம் வைத்த கல் இழைத்த ஜடை தாண்டா

  • புஜ கீர்த்தி

  • கச்சு எடுத்து கட்டி, அதில் அரைச் சலங்கை தொங்க

  • ரங்கூன் அட்டிகை

  • ஒட்டியாணம்

உடை மற்றும் அமர்வு :
வெண் பட்டாடை அணிந்து,
வலது திருவடியை மடித்து அமர்ந்து,
இடது திருவடியை நீட்டி,
திருக்கை தலையிப்புடன்
மோகினி ரூபமாக மங்களகரமாக அருள்பாலித்தார்.

Leave A Reply

Your email address will not be published.