Ultimate Tv Tamil
Top Tamil News Channel In Tamilnadu

Trending Now

வடபழநி முருகன் கோயிலில் எழுத்தர் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது..!

0

வடபழனி ஆண்டவர் திருக்கோயிலின் உப கோயிலான அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் காலியாக உள்ள எழுத்தர் மற்றும் காவலர் பணியிடங்களை நிரப்ப இந்து மதத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் இந்து சமய அறநிலையத் துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 02
பணியிடம் தமிழ்நாடு
ஆரம்ப தேதி 10.12.2025
கடைசி தேதி 07.01.2026

 

 

1. பதவி: எழுத்தர்

சம்பளம்: மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 

2. பதவி: காவலர்

சம்பளம்: மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

 

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.12.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.01.2026

 

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பப் படிவம் மற்றும் நிபந்தனைகளை https://hrce.tn.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் 

 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

துணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழநி, சென்னை- 600 026.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 07.01.2026 அன்று மாலை 5.45 மணி வரை மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும். அதன் பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

Leave A Reply

Your email address will not be published.