சென்னை: டிட்வா புயல் காரணமாக சென்னையில் கடந்த 3 நாட்களுக்கும் மேல் மழை பெய்து வந்தது. இந்நிலையில், இன்று மழையின் தீவிரம் குறைந்திருக்கிறது. இந்நிலையில் இரவு 7 மணி வரை ராணிப்பேட்டை, வேலூர் தொடங்கி கன்னியாகுமரி வரை மொத்தம் 20 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், “அரியலூர், கடலூர், கோவை, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், விழுப்புரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், நீலகிரி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய இடங்களில் மழைக்கு வாய்ப்பு” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


