*வலுவிழந்த “டிட்வா” புயல்;*
*கடலோர மாவட்டங்களில் 2 நாட்கள் தங்கிச் செல்லும் “டிட்வா” ஆழ்ந்த* *காற்றழுத்த தாழ்வு மண்டலம்..*
*வானிலை மையத்தின் குழப்பமான அறிவிப்புகளால் தொடரும் கனமழை…*
*பள்ளிகளுக்கு விடுமுறை இல்லாததால் ‘புலம்பும்’ பெற்றோர்கள்..!*
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த “டிட்வா” புயல், நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில்…
மணிக்கு *10* கி.மீ வேகத்தில், சென்னையில் இருந்து *50* கி.மீ தூரத்திலும்…
கடலூரில் இருந்து *150* கி.மீ தூரத்திலும்…
புதுச்சேரியில் இருந்து *130* கி.மீ தூரத்திலும் மையம் கொண்டுள்ளது.
வடதமிழக கடலோரப் மாவட்டங்களை நெருங்கி வரும் ‘ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக…’
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
அடுத்த *12* மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…
கடலோர மாவட்டங்களில், *2* நாட்கள் நிலைகொண்டு செல்லும் என கணிப்பு..
இதனால், அடுத்த *2* நாட்களுக்கு மழை தொடர வாய்ப்பு.
மேலும், வானிலை ஆய்வு மையத்தின் தெளிவில்லாத அறிவிப்புகளால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு இல்லை.
கனமழையால், பெரும் சிரமத்துடன் பள்ளிகளுக்கு சென்ற மாணவர்களைக் கண்டு பெற்றோர்கள் ‘புலம்பும்’ நிலைக்கு ஆளாகியுள்ளனர்.


