Ultimate Tv Tamil
Top Tamil News Channel In Tamilnadu

Trending Now

ஆதாரில் இலவசமாக புதுப்பிக்க கால அவகாசம் ஜூன் 14ம் தேதி வரை நீட்டிப்பு..!

0

ஆதார் கார்டை இலவசமாக அப்டேட் செய்வதற்கான அவகாசம் 2026 ஜூன் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், ஆதார் கார்டை அப்டேட் செய்ய நினைப்பவர்களுக்கு பெரிய நிவாரணம் கிடைத்துள்ளது.

 

ஆதாரில் இலவசமாக புதுப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ‘MY ஆதார்’ அல்லது ‘M-ஆதார்’ செயலி வாயிலாக பொதுமக்கள் எவ்வித கட்டணமுமின்றி வரும் ஜூன் 14ம் தேதி வரை ஆன்லைனில் புதுப்பித்து கொள்ளலாம். மேலும், 7 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பயோமெட்ரிக் விவரங்களை ஆதார் சேவை மையங்களில் வரும் மார்ச் மாதத்திற்குள் இலவசமாக புதுப்பித்துக்கொள்ளலாம்.

இந்த அறிவிப்பின் மூலம் தங்களுடைய ஆதார் கார்டை இலவசமாகப் புதுப்பிக்க விரும்புவோர் தங்கள் ஆவணங்களை இலவசமாகப் பதிவேற்றுவதன் மூலம் ஆதாரில் மாற்றங்களைச் செய்யலாம். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள ஆதார் கார்டுதாரர்கள் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆதார் அட்டைதாரர்கள் myAadhaar போர்டல் மூலம் இலவசமாக ஆன்லைனில் அப்டேட் செய்து கொள்ளலாம்.

 

ஆதார் கார்டுகளை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ( UIDAI ) ஆதார் PVC அட்டைக்கான சேவைக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்தக் கட்டணம் 50 ரூபாயில் இருந்து தற்போது 75 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டணம் 2026 ஜனவரி 1 அமலுக்கு வந்துள்ளது.

 

ஆதார் PVC அட்டை உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கான பொருட்கள், அச்சிடுதல், பாதுகாப்பான டெலிவரி மற்றும் தொடர்புடைய லாஜிஸ்டிக் செலவு கடந்த ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. அதிகரித்து வரும் செயல்பாட்டுச் செலவைக் கருத்தில் கொண்டும், தொடர்ந்து உயர்தர சேவையை வழங்குவதை உறுதி செய்யும் நோக்கிலும் இந்த கட்டணக் கட்டமைப்பை மறுஆய்வு செய்துள்ளளோம்” என்று UIDAI தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.