Ultimate Tv Tamil
Top Tamil News Channel In Tamilnadu

Trending Now

பழம்பெரும் நடிகர் புன்னப்ரா அப்பச்சன் காலமானார்..!

0

பழம்பெரும் நடிகர் புன்னப்ரா அப்பச்சன் (77) இன்று காலமானார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக அவர் உயிரிழந்தது திரையுலகினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

1970 காலகட்டத்தில் மலையாள திரையுலகில் அறிமுகமாகி, தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர், பழம்பெரும் நடிகர் புன்னப்ரா அப்பச்சன் (77). முக்கியமாக வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.இந்த நிலையில், வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இவர் உயிரிழந்தார். இவரது மறைவு, திரையுலகினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Leave A Reply

Your email address will not be published.