Ultimate Tv Tamil
Top Tamil News Channel In Tamilnadu

Trending Now

ஜனவரி 7 முதல் பிராட்வே பேருந்து நிலையம் மூடல்!

0

ஜனவரி 7 (07.01.2026) முதல் பிராட்வே பேருந்து நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, அங்கிருந்து இயங்கும் பேருந்துகள் ராயபுரம் மற்றும் தீவுத்திடல் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முனையங்களிலிருந்து இயக்கப்படும் என மாநகர் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

ராயபுரம் தற்காலிக முனையத்திலிருந்து இயங்கும் பேருந்துகள்:

ராயபுரம் முனையத்திலிருந்து கீழ்க்கண்ட முக்கிய வழித்தடங்கள் மற்றும் அண்ணாசாலை, ஈ.வே.ரா சாலை வழியாகச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்:

காமராஜர் சாலை வழி: 6, 13, 60E, 102, 109, 102C, 102K, 102P, 102S, 102X, 109A, 109X, 21G, 21L, 21E ET.

அண்ணாசாலை வழி: 11, 21, 26, 52, 54, 60, 10E, 11G, 11M, 155A, 17E, 17K, 188C, 188ET, 18A, 18B, 18D, 18E, 18K, 18P, 18R, 18RX, 18X, 21C, 26B, 26G, 26K, 26M, 26R, 51D, 51J, 52B, 52G, 52K, 54G, 54L, 5C, 60A, 60D, 60G, 60H, 88C, 88K, 88K ET, 9M ET, A51, D51 ET, E18, E51, M51R.

ஈ.வே.ரா சாலை வழி: 50, 101CT, 101X, 53E, 53P.

நிறுத்தங்கள்: இந்த பேருந்துகள் ராயபுரம் செல்லும் போது, வடக்கு கோட்டை சாலையில் உள்ள துறைமுகம் எம்.எல்.ஏ அலுவலகம் அருகே நின்று பயணிகளை ஏற்றிச் செல்லும். காமராஜர் சாலை பேருந்துகள் பாரிஸ் கார்னர் மற்றும் எஸ்பிளானேட் சாலை வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளன.

தீவுத்திடல் தற்காலிக முனையத்திலிருந்து இயங்கும் பேருந்துகள்:
பீச் ஸ்டேஷன், மண்ணடி மற்றும் வேப்பேரி வழியாகச் செல்லும் பேருந்துகள் தீவுத்திடல் முனையத்தைப் பயன்படுத்தும்:

பீச் ஸ்டேஷன் வழி: 1, 4, 44, 330, 33L, 38A, 38G, 38H, 44C, 44CT, 4M, 56D, 56J, 56K, 56P, 57D, 57F, 57H, 57J, 57M, 8B, C56C, 557A ET.

மண்ணடி வழி: 33B, 56C, 56F.

ஈ.வே.ரா சாலை & வேப்பேரி வழி: 15, 20, 15F, 15G, 17D, 20A, 20D, 50ET, 50M, 71D, 71E, 71H, 71V, 120, 120CT, 120F, 120G, 120K, 150, 35, 42, 242, 142B, 142P, 35C, 42B, 42D, 42M, 640, 64K, 7E, 7H, 7K, 7M.

நிறுத்தங்கள்: தீவுத்திடல் நோக்கிச் செல்லும் பேருந்துகள் கோட்டை நிலையம் (Fort Station), டி.என்.பி.எஸ்.சி (TNPSC) சாலை நிறுத்தம் மற்றும் முத்துசாமி மேம்பாலம் வழியாக இயக்கப்படும். தீவுத்திடலில் இருந்து புறப்படும் போது, ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் என்.எஸ்.சி போஸ் சாலை சந்திப்பு நிறுத்தங்களில் பயணிகளை ஏற்றிச் செல்லும்.

பணிகள் முடியும் வரை இந்த தற்காலிக மாற்றம் நடைமுறையில் இருக்கும் என்பதால், பயணிகள் தங்களது பயணங்களைத் திட்டமிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.