Ultimate Tv Tamil
Top Tamil News Channel In Tamilnadu

Trending Now

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம்..!!

0

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு இதுவரை 92,626 படிவங்கள் பெயர் சேர்ப்புக்காகவும் (படிவம் 6), 1,007 படிவங்கள் பெயர் நீக்கத்திற்காகவும் (படிவம் 7) அளிக்கப்பட்டுள்ளன. இறந்த வாக்காளர் தவிர சுமார் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு, அவர்கள் மீண்டும் சேர இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான கால அளவு இருக்கும் நிலையில், இதுவரை ஒரு லட்சத்திற்கும் குறைவான 6-ம் எண் படிவங்கள்தான் வந்துள்ளன.

ந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார். இந்த சிறப்பு முகாம் வருகிற 27,28-ம் தேதி (சனி, ஞாயிறு) மற்றும் ஜனவரி 3,4 (சனி, ஞாயிறு)ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் நடைபெறுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 6.11 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.