டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சென்னையிலிருந்து டெல்லி, வாரணாசி செல்லும் 4 விமானங்களும், சென்னைக்கு வருகை தரும் 3 விமானங்களும் என மொத்தம் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், இதே காரணத்தால் சென்னையில் இருந்து செல்லும் மற்றும் வருகை தரும் மேலும் 7 விமானங்கள் தாமதமாக இயக்கப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயணிகள் தங்கள் விமான நிலவரத்தை முன்கூட்டியே சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


