Ultimate Tv Tamil
Top Tamil News Channel In Tamilnadu

Trending Now

“பாஸ், QR கோடு என எதுவும் தேவையில்லை, அனைவரும் விஜய்யை சந்திக்கலாம்” – செங்கோட்டையன்

0

ஈரோட்டில், விஜய் பிரச்சாரம் செய்யும் பகுதியில் காவல்துறையினர் குறிப்பிட்ட படி, பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் நாளை பிற்பகலுக்குள் செய்து முடிக்கப்படும் என தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சரளை என்ற இடத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நாளை மறுதினம் மக்கள் சந்திப்பு பரப்புரை நடத்த உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அந்த பணிகளை தமிழக வெற்றி கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் மற்றும் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கே.ஏ.செங்கோட்டையன், “பாதுகாப்பு அடிப்படையில் என்னென்ன தேவை என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளாரோ அனைத்தும் நாளை மதியத்திற்குள் நிறைவு செய்யப்படும், 40 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. அவசர தேவைக்காக 40 வாக்கிடாக்கி பயன்படுத்தப்படும். 24 ஆம்புலன்ஸ்கள், 72 மருத்துவர்கள் 120 செவிலியர்கள் அனைத்து வசதிகளுடன் பணியில் இருப்பர். 20 சின்டெக்ஸ் டேங்குகள் தண்ணீர் கொடுக்கப்படும். பாட்டிலில் அனைவருக்கும் தண்ணீர் வழங்கப்படும். கழிவறைகள் 20 இடங்களில் அமைக்கப்படும். மூன்று தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட உள்ளன. 60 ஏக்கர் பரப்பளவில் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு தனியாக 20 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழகம் இதுவரை கண்டிராத அளவிற்கு பாதுகாப்புடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும். தமிழ்நாட்டிற்கு முன்மாதிரியாக இது அமையும். கட்சியினர் 10 ஆயிரம் பேரும், பொதுமக்கள் 25 ஆயிரம் பேரும் இந்த கூட்டத்தில் பங்கேற்பார்கள். வருவர்களுக்கு யாருக்கும் பாஸ் கிடையாது. வருபவர்கள் அனைவரும் விஜயை பார்த்து செல்லலாம். 16 இடங்களில் உள்ளே வந்து செல்வதற்கு இடம் விடப்பட்டுள்ளது” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.