ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ள நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி இணைந்து இன்று திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் விதமாக புதிய சட்டங்கள் உள்ளன என்பதால் அவை திரும்ப பெறப்பட வேண்டும் என்று கூட்டத்தில் பேசப்பட்டன.



