ஆப்ரிக்கா கண்டத்தின் கிழக்கு பகுதி மெதுவாக பிளந்து, அடுத்த 5 முதல் 10 மில்லியன் ஆண்டுகளுக்குள் புதிய பெருங்கடல் உருவாகும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
ஆப்ரிக்காவைப் பிளந்து வரும் டெக்டோனிக் விசைகள்
ஆப்ரிக்க கண்டத்தின் அடியில், சூரிய வெளிச்சத்திற்கு தெரியாமல் பிரம்மாண்டமான மாற்றம் நிகழ்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இது, ஆப்ரிக்க கண்டத்தின் எதிர்காலத்தையே மாற்றி அமைக்கக்கூடியது என்றும் பூமியின் டெக்டோனிக் விசைகள் (Tectonic forces) மெல்ல மெல்ல ஆப்ரிக்காவைப் பிளந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதன் மூலம் கிழக்கு ஆப்ரிக்காவில் பூமியின் ஆறாவது பெருங்கடல் (Sixth Ocean) உருவாக வாய்புள்ளதாக விஞ்ஞானிகள் (Scientists) தெரிவிக்கின்றனர்.
மேலும், அடுத்த 5 முதல் 10 மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு பூமியின் நிலப்பரப்பு மற்றும் நீரின் மட்டமும் மாற்றமடையும் என தெரிவிக்கின்றனர்.
பூமியின் மேற்பரப்பில் புவியியல் விரிசல் .


