Ultimate Tv Tamil
Top Tamil News Channel In Tamilnadu

Trending Now

மின்னொளியில் மணிமகுடம் போல் ஜொலிக்கும் முருகனின் மூன்றாம் படை வீடு; வரும் 8ஆம் தேதி கும்பாபிஷேகம்!!!!

0

திண்டுக்கல்; முருகனின் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம், பழநி திருஆவினன்குடி கோயில் கும்பாபிஷேகம் வரும் 8 ம் தேதி திங்கட்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு கோவில் மின்னொளியில் ஜொலிக்கிறது.

பழநி முருகன் கோயில் கட்டுப்பாட்டின் கீழ் முருகனின் மூன்றாம் படை வீடான அடிவாரத்தில் குழந்தை வேலாயுதசுவாமி எழுந்தருளியுள்ள திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற முகூர்த்த கால் நடும் பணி நவ.5.,ல் நடந்தது. யாகசாலையில் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. டிச.8 ல் திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு விமான கலசங்கள் டிச.1 ல் பொருத்தப்பட்டன. நேற்று (டிச.,4) அதிகாலை 5:00 மணிக்கு மங்கள இசை உடன் கணபதி ஹோமம், லட்சுமி பூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜை, கஜ பூஜை, சுமங்கலி பூஜை, பிரம்மச்சரிய பூஜை கன்னி பூஜை, நடைபெற்றது. இன்று (டிச.,5) அலங்கரிக்கப்பட்ட திருக்குடங்கள் வேள்விச் சாலையில் எழுந்தருள செய்தல் சூரிய பூஜை, சூரிய ஒளிக்கதிரில் இருந்து நெருப்பு எடுத்தல், திருமஞ்சனம் கொண்டு வருதல் நடைபெற்றது. கும்பாபிஷேக தினமான டிச.,8ஆம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு ஆறாம் கால வேள்வி நடைபெறும். காலை 6:30 மணிக்கு மூலவர் சன்னதி, திருச்சுற்றில் உள்ள சன்னதிகளுக்கு விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று தீபாராதனை நடைபெறும். இதற்காக திருஆவினன்குடி கோயில் மலைக்கோயில் பகுதிகளில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, கோவில் மின்னொளியில் ஜொலிக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.