Ultimate Tv Tamil
Top Tamil News Channel In Tamilnadu

Trending Now

சுகாதாரத்துறை எச்சரிக்கை !!!! தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு …..

0

கடந்த மூன்று நாட்களாக பெய்த மழையின் காரணமாக சென்னை, கோவை, தஞ்சாவூர், கடலூர், மதுரை, வேலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதாக தமிழக பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை, கோவை, மதுரை, கடலூர், தஞ்சாவூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏடிஸ் வகை கொசுக்கள் காரணமாக டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மழையினால் தேங்கியிருக்கக் கூடிய தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாவதாக கூறப்படும் நிலையில், அதீத காய்ச்சலே டெங்குவிற்கான அறிகுறி என மருத்துவர்கள் கூறுகிறார்கள். காய்ச்சலுடன் வயிற்றுப்போக்கு, ஈறுகளில் ரத்தக்கசிவு இருப்பதும் டெங்குவிற்கான அறிகுறியே எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு மேலும் அதீத காய்ச்சல் இருந்தால் மருத்துவமனையை அணுக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக பெய்த மழையின் காரணமாக சென்னை, கோவை, தஞ்சாவூர், கடலூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதாக தமிழக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை டெங்குவால் 25 ஆயிரம் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகம் முழுவதும் டெங்குவால் நாள்தோறும் 100 முதல் 120 பேர் வரை பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, கோவை மதுரை, கடலூர், தஞ்சாவூர், வேலூர் உள்ளிட்ட பெரிய மாவட்டங்களில் நாள்தோறும் 25 முதல் 30 பேர் டெங்கு காய்ச்சலால் பாதித்து வருகின்றனர். மூன்று நாட்களுக்குப் பிறகு காய்ச்சல் அதிகரித்தால் உடனடியாக அருகில் இருக்க மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. டெங்கு பாதிப்பால் தற்போது அதிகரித்து வரும் மாவட்டங்களில் மருத்துவ முகாம் கூடுதலாக நடத்த தமிழக பொது சுகாதாரத்துறை உத்தரவு அளித்துள்ளது. டெங்கு அதிகரிப்புக்கு காரணம் மழை பெய்து தேங்கி இருக்கக்கூடிய நீரில் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளதாக எனவே பொதுமக்கள் அனைவரும் தங்களது குழந்தைகள் மற்றும் பெரியோர்களை கொசுக்களிடம் இருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.